Tuesday, July 26, 2011

முகங்கள் .......


உடைந்த கண்ணாடி சில்களில் 
உன் முகத்தை பார் 
அது உன் முகத்தை உடைந்தே காட்டும் 
ஆனால் 
உடைந்த என் மனதில் 
உன் முகத்தை பார் 
அது உன் முகத்தை முழுவதும் காட்டும் 
உடைந்தது எனது மனம் 
உனது முகம் அல்ல 
போனது 
எனது ஜீவன் என்னுள் 
இருக்கும் உன் சுவாசம் அல்ல !!!!!! 

காதல் சொல்ல காத்திருக்கிறேன் !!


அருகில் இருந்தும் 
வார்த்தை இல்லை ! 
மொழி இருந்தும் 
பேச வில்லை ! 
கண்கள் பார்த்தும் 
பாசை புரியவில்லை ! 
கனவில் வந்தும் 
காதல் சொல்லவில்லை ! 
இன்று சொல்ல நினைக்கிறேன் 
கண்ணீரால் என் காதலை ! 
நீ மேல் உலகில் 
நான் கீழ் உலகில் ! 
என்னவளே என் காதல் சொல்ல 
காத்திருக்கிறேன் உன் நினைவோடு ! 
நானும் சொர்க்கம் வரும் வரை .......

உன் பிரிவின் வலி......


ரோஜா செடியில் இருந்து 
ரோஜா பூவை கில்லி 
பறிப்பதை போன்ற வலி.............

கோபப்படு............


தயவுசெய்து 
சந்தோஷத்திலும் - நீ 
கோபப்படு -உன் 
புன்னகையை விட 
கோபத்தையே 
நான் 
அதிகம் 
நேசிக்கிறேன்..............​..

அழகிய கோபம்.......


நீ என் மீது 

கோபம் கொள்ளும் 

அழகை ரசிக்கிறேன் ! 

உனக்கு என் மீது 

எவ்வளவு அன்பு என்று!

கனவு.............


உறங்காத இரவு 
மனம் கலங்கும் பொழுது 
உன் அன்பின் நினைவு 
உயிர்காக்கும் கனவு.............!

முடிவில்லாதது .......


காதல் 
முடிந்து விட்டது என்று 
என் முடிவை 
தேடினேன் 
ஆனால் 
முடிவில்லாதது 
காதல் என்று 
அறிந்தேன் உன்னிடம்..........

நம் இதயத்தின் வெளிப்பாடு..........


ஒப்புமை செய்வதற்கு 

யாருமில்லை உன்னோடு.........! 


வேற்றுமை சொல்வதற்கு 

யாருமில்லை என்மனதோடு........! 


ஒற்றுமை காண்பதே 

நம் இதயத்தின் வெளிப்பாடு..........!

நிறுத்தமாட்டேன்.....


மழை பெய்வது நின்றாலும் 

வெயில் அடிப்பது நின்றாலும் 

பூமி சுழல்வது நின்றாலும் 

நான் உன்னுடன் பழுகுவதை 

நிறுத்தமாட்டேன்! 

உறக்க மருந்தாய்..........


என் தூக்கம் மறந்த 
இரவுகளின் முன்பாதியில் 
என் மூளை உன் 
நினைவுகளை தட்டி 
எழுப்பும் பொழுது 
தூங்கிபோகின்றேன் 
என்னை அறியாமல் ... 
உறக்க மருந்தாய் 
உன் நினைவுகள் .... 

என் உயிரின் சொந்தக்காரி...................


என் இதமான 
கனவுகளுக்கு 
சொந்தக்காரி - பல 
இனிமையான 
பலன்களுக்கு 
சொந்தக்காரி 
இடைவிடாத சண்டைக்கு 
சொந்தக்காரி -என் 
இதயத்தில் துடித்திருக்கும் 
சொந்தக்காரி 
நீயே 
என் உயிரின் 
சொந்தக்காரி...............​......

கவிதையும் நீயும் ...........


கவிதையும் நீயும் 
ஒன்று தானோ 
உன்னிடம் பேசும் 
போதும் வார்த்தை இல்லை 
கவிதை எழுதும் 
போதும் வார்த்தை இல்லை .......................!!

கூந்தலில் சூடிய பூக்கள்


உன் கூந்தலுக்கும் 

ஓர் பெருமை உண்டு 
என்ன வென்று கேட்க்கிறாயா 


நீ கூந்தலில் சூடிய பூக்கள் 
இந்த மண்ணில் விழும் போது 
மறுபடியும் பூக்களாக பூக்கிறது 
உன் கூந்தலை வந்தடைய........

மாறாதது உன் முகம்......


கண் மூடி படுத்தேன். 

தெரிந்தது உன் முகம்... 

கண் விழித்து பார்த்தேன். 

தெரிந்தது உன் முகம்... 

கண்ணீரை சிந்தினேன். 

கண்ணீரிலும் உன் முகம்... 

புரிந்தது உண்மை எதுவென்று.... 

மாறாதது உன் முகம்...... 

உன் நினைவுகளை மட்டும் 

மாற்றி கொள்ளாதது 

என் இதயம்... 

‪Anbe Sugama (Paarthale Paravasam)‬‏ - YouTube

‪Anbe Sugama (Paarthale Paravasam)‬‏ - YouTube

என் கடைசி உறக்கம் ....

அன்பாய் உன் மடியில் தலை வைத்தேன் 
என் தாயானாய்! 

ஆதரவாய் உன் தோள் சாய்ந்தேன் 
என் தந்தையானாய்! 

பாசத்துடன் உன் கைகளைப் பற்றினேன் 
என் உடன்பிரப்பானாய்! 

விட்டுப்போன என் உறவுகளை 
உன்னில் கண்டேன்! 

என் கடைசி உறக்கம் 
உன் மடியில் நிகழ வேண்டும். 


ஏதோ ஒரு வினாடிக்கு ஒரு முறை...


இறுக்கி மூடிய
இமைகளையும் தாண்டி...
உள் நுழைந்துவிடுகிறது
உன் நினைவுகள்...
இமைகள் திறந்திருந்தும்....
உன்னுடனான
பகல் கனவுகள்
தினம் தோறும்....
அனுதினமும்
உன்னையே
எண்ணிக் கொண்டிருக்கின்றேன்
என்று மட்டும்
எண்ணாதே....
ஏதோ
ஒரு வினாடிக்கு
ஒரு முறை....
அல்லது
இருமுறை மாத்திரம்தான்....

முகநூலுக்கு வருக! - உள்நுழைக, உள்நுழைப் பதிவுசெய்க அல்லது மேலும் அறிக.

முகநூலுக்கு வருக! - உள்நுழைக, உள்நுழைப் பதிவுசெய்க அல்லது மேலும் அறிக.

rose

WELCOM OUR WEP PAGETHAN