Tuesday, July 26, 2011

என் கடைசி உறக்கம் ....

அன்பாய் உன் மடியில் தலை வைத்தேன் 
என் தாயானாய்! 

ஆதரவாய் உன் தோள் சாய்ந்தேன் 
என் தந்தையானாய்! 

பாசத்துடன் உன் கைகளைப் பற்றினேன் 
என் உடன்பிரப்பானாய்! 

விட்டுப்போன என் உறவுகளை 
உன்னில் கண்டேன்! 

என் கடைசி உறக்கம் 
உன் மடியில் நிகழ வேண்டும். 


No comments:

Post a Comment